|
Article in other languages:
|
கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
வரலாறுமுதன்மைக் கட்டுரை: கனடாவின் வரலாறு ஆதிக்குடிகள்கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள் (Indians), இனுவிட் (Inuit), மெயிரி (Metis, கேட்க). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்கள் பலவகைப்படுவார்கள். செவ்விந்தியர் அல்லது இண்டியன்ஸ் என்ற சொல்லை இழிவானதாக கனடிய ஆதிக்குடிகள் கருதியதால், அவர்கள் தங்களை முதற் குடிகள் (First Nations) என்று அழைத்தார்கள். இம்மக்களின் வாழ்வியல், அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டு முதற் குடிகளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு:
கனடாவின் மிக குளிரான மேற்பகுதிகளில் வாழ்பவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க எஸ்கிமோ என்று தற்போது இழிவாகக் கருதப்படும் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத்தோல் உடுப்புடன் பனிக்கட்டியினால் கட்டப்பட்ட அல்லது சூழப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களை சுட்டுவது ஒரு ஊடக மரபு. ஆதிக்குடிமக்கள் ஐரோப்பியர் கலந்த மரபினர் மெயிரி எனப்பட்டனர். ஐரோப்பியர் வரவுபிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608ம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கிலக் குடியேறிகள் நியூ பவுண்ட்லாந்தில் 1610 ஆம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை, வட அமெரிக்காவுக்கு புது நோய்களை கொண்டுவந்தது. இதனால், அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் இரையானார்கள். கனேடியக் கூட்டரசு உருவாக்கம்பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும். பல்நாட்டவர் வருகைபிரெஞ்சு, ஆங்கிலேய குடிவரவாளர்களாலும் ஆதிக்குடிகளாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர்.[1] 1885 ஆம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக "Chinese Exclusion Act" 1923 ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.
புவியியல்இட அமைவுகனடா வட அமெரிக்காவின் தெற்கு 41% வீதத்தை தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பரந்த நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் மற்றும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கிறீன்லாந்து கனடாவின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. கனடாவின் பரப்பளவு 9,984,670 கிமீ ஆகும். இதில் தரை 9,093,507 கிமீ, நீர் 991,163 கிமி ஆகும். கனடாவின் பரந்த பரப்பளவு காரணமாக அது பல்வேறு விதமான இயற்கையமைப்புகளையும் காலநிலைகளையும் கொண்டது. இயற்கையமைப்புகனடாவில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு தாவர வகைகள் வளர்கின்றன. மேற்குப் பகுதி மலையும் மலை சார்ந்த ஒரு நிலப்பகுதி ஆகும். இங்கு மழைக்காடு போன்ற காலநிலையும் அதே போன்று அடர்த்தியான காடுகளும் காணப்படுகின்றன. பிரெய்ரி தாழ்நிலப்பகுதியில் புல் வெளிகள் உண்டு. அதற்கு மேலே ஊசியிலைக் காட்டுத்தாவரங்களும், அதற்கு மேலே மிக குளிர் நிலப்பகுதியில் thundra (low grasses, shurbs, mosses, lichens)வும் காணப்படுகின்றன. தென் ஒன்ராறியோவிலும் கிழக்குப் பகுதிகளிலும் தூந்திரத் தாவரங்கள் (deciduous trees) உண்டு. காலநிலைகனடா மத்திய கோட்டுக்கு மிக மேலே இருப்பதால் பெரும்பாலும் கடும் குளிரான காலநிலையை கொண்டது. இடத்துக்கு இடம் சராசரி காலநிலை மாறியமையும். மேற்கு கனடாவில் குளிர்காலத்தில் -15 செல்சியஸ் சராசரி வெப்பநிலையை கொண்டிருக்கும்; இது, -40 வரை தாழக்கூடியது. [3] வடக்குப் பகுதிகளில் குளிர் மிக அதிகமாகவும், குளிர்காலம் 11 மாதங்கள் வரை நீடிக்கவல்லதாகவும் இருக்கும். தெற்குப் பகுதிகளில் ஏழு மாத காலம் வரை குளிர்காலம் இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை விழுவதும், இடங்கள் எல்லாம் விறைத்துக் காணப்படுவதும் இங்கு வழமை.
கனடா மாகாணங்களும் ஆட்சி நிலப்பகுதிகளும்
பொருளாதாரம்முதன்மைக் கட்டுரை: கனடாவின் பொருளாதாரம்
இயற்கை வளம்நிலம், நீர், காடு, மீன், எண்ணெய், கனிமங்கள் ஆகிய இயற்கை வளங்கள் கனடாவில் மிக்க உண்டு. பிரிட்டிஷ் கொலம்பியாவில் மரங்கள் பேண்தகுமுறையில் வெட்டப்பட்டு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1950 களில், அல்பேர்டாவில் எண்ணெய் கண்டறியப்பட்டது. அல்பேர்டா, இன்று செல்வம் மிக்க ஒரு மாகாணமாக வளர எண்ணெய் உற்பத்தி ஏதுவாக்கிற்று. கனடாவே அமெரிக்காவுக்கு அதிக விழுக்காடு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்பது குறிப்படத்தக்கது. அட்லாண்டிக் மாகாணங்கள் மீன்பிடி வளம் மிக்கப் பகுதிகளாகும். எனினும் முந்தைய பேண்தகுமுறையற்ற மீன்பிடிப்பால் பல மீன்வளங்கள் அருகிப்போய்விட்டன. தற்சமயம் இந்த மாகாணங்களை அண்டிய கடற்பகுதியிலும் எண்ணெய் வளம் இருப்பது தெரியவந்து, அதை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தப்படுகின்றது. வட ஒன்ரோறியோவில் தங்கம், நிக்கல், யுரேனியம், காரீயம் ஆகிய கனிமச் சுரங்கங்கள் உண்டு. இவற்றின் உலக உற்பத்தி அளவில் கனடாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கனடா இயற்கைவளம் மிக்க நாடு என்றாலும் கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 6% மட்டுமே இத்துறையில் இருந்து வருகின்றது; 4% மக்களே இதில் பணியாற்றுகிறார்கள். வேளாண்மைவேளாண்மையும் அதனை சார்ந்த தொழிற்துறைகளும் மொத்த தேசிய உற்பத்தியில் 8.3 விழுக்காட்டை கொண்டு கனடிய பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது (2003 கணிப்பீடு). [2] உள்கட்டுமானம்கனடாவின் உள்கட்டுமானக் கூறுகளான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ஆகியவை உறுதியாக கட்டமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, தேவைக்கேற்ப விரிவாக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சி பெற்ற மனிதவளமும், இணக்கமான வினைத்திறன் மிக்க அரசியல் சூழலும் இதை ஏதுவாக்கின்றன. போக்குவரத்துமுதன்மைக் கட்டுரை: கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு கனடாவின் விரிந்த நிலப்பரப்பு காரணமாக எல்லைக்கு எல்லை அதனை இணைக்கும் ஒரு சிறந்த போக்குவரத்து வழி அதன் இருப்பிற்கு முக்கியமாக அமைகின்றது. மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றி இறக்கும் வழிமுறைகள் சிறப்பாக அமைவது பொருளாதரத்திற்கு அவசியமாகவும், இதன் காரணமாக, அரசியலில் முக்கிய அம்சமாகவும் கனடாவில் இருக்கின்றது. ஆகையால், சாலைகள், தொடருந்துப் பாதைகள், வான்வழி, கடல்வழி மற்றும் குழாய்வழி போக்குவரத்துக்கள் விரிவாக கட்டமைக்கப்பட்டுள்ளன. பொருள் உற்பத்திதென் ஒன்ராறியோவில் வளர்ச்சி அடைந்த உற்பத்தித்துறை உண்டு. கூடிய அளவு கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கியூபெக் மாகாணம் உலகின் ஆறாவது பெரிய விமான உற்பத்தி இடமாகும். இவற்றைத் தவிர பலதரப்பட்ட பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. சேவைத் துறைகனடாவின் பொருளாதாரத்தில் பெரிய துறை சேவைத்துறையாகும். இத்துறை சில்லறை வணிகம், நிலம்/மனை வணிகம், நிதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், கேளிக்கை மற்றும் சுற்றுலாத் துறைகளை உளளடக்கியது. இத்துறையிலேயே 75 விழுக்காடு மக்கள் வேலை செய்கின்றார்கள். அறிவியலும் தொழில்நுட்பமும்கனடா, ஓர் உயர்ந்த, தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு அடிப்படை பொருளாதரக் கடமைப்பை உருவாக்கிப் பேண முயல்கின்றது. அதற்கு தேவையான தகவல், தொடர்பாடல் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி, கனடாவின் ஆராய்ச்சி வடிவமைப்புக் கட்டமைப்பையும் முனைப்புடன் வழிநடத்தி வருகின்றது. இயல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (Natural Sciences and Engineering Research Council) இப்பணியை மேற்கொண்டு வருகின்றது. CANDU reactor, Canada Arm, Maple (software) ஆகியவை கனடாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் சிறப்புக்கு சில எடுத்துகாட்டுக்கள் ஆகும். ஏற்றுமதி / இறக்குமதிகனடாவின் ஏற்றுமதி / இறக்குமதியில் அமெரிக்கா முதன்மைப் பங்கு வகிக்கிறது. கனடாவின் 81% ஏற்றுமதியும் 67% இறக்குமதியும் அமெரிக்காவுடனே அமைந்திருக்கிறது [3]. இது அமெரிக்காவின் 23% ஏற்றுமதியையும் 17% இறக்குமதியையும் சுட்டுகின்றது [4]. அரசமைப்புமுதன்மைக் கட்டுரை: கனடிய அரசமைப்பு கனடா அடிப்படையில் ஒரு மக்களாட்சிக் கூட்டரசு ஆகும். அத்தோடு, அரசியலைமைப்புச்சட்ட முடியாட்சியும் ஆகும். பெயரளவில், எலிசெபெத் II கனடாவின் அரசி ஆவார். நடைமுறையில் நாடாளுமன்ற மக்களாட்சியும் மரபுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
கனடாவின் மத்திய பாரளுமன்றம் ஆளுனர், மக்களவை, செனற் ஆகியவற்றால் ஆனது. கனாடவின் முடிக்குரியவரின் சார்பாக, மரபு ரீதியான சில முக்கிய கடமைகளை ஆளுனர் ஆற்றுவார். கனடா பிரதமரின் பரிந்துரைக்கமைய கனடாவின் முடியுரிமைக்குரியவரால் ஆளுனர் நியமிக்கப்படுகின்றார்.
அரசியல் கட்சிகள்முதன்மைக் கட்டுரை: கனடா அரசியல் முக்கிய நடுவண் அரசியல் கட்சிகள்:
சட்டம்முதன்மைக் கட்டுரை: கனடாவின் சட்ட அமைப்பு கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அதன் நடுவண், மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விபரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றன. கனடாவின் நீதியமைப்பு (Judicial System) சட்டங்களை புரிந்து நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களை செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே நீதிக் கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது.[7] நிர்வாகம்கனடாவின் ஆட்சி நிர்வாகத் துறை அரசை நிர்வகித்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மக்களுக்கு சேவைகள் வழங்கல் என பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியல் இடையூறுகளை மட்டுப்படுத்தி, ஊழலற்ற, வெளிப்படையான திறன் வாய்ந்த நிர்வாகத்தை தருவது வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அவசியமாகின்றது. ஒப்பீட்டளவில் கனடாவின் நிர்வாகத்துறை சிறப்பாக செயல்படுகின்றது. மருத்துவ சேவை1960களில் கனடிய மக்கள் மருத்துவத் தேவைகளை ஒரு சமூகப் பொறுப்பாக உணர்ந்தார்கள். இந்தத் தேவையை, உணர்வை 1964 மருத்துவச் சேவைகளுக்கான அரச ஆணைய முடிவுகள் வெளிப்படுத்தியது. இந்த ஆணையம் செய்த பரிந்துரைகளுக்கு ஏற்ப மருத்துவக் கவனிப்புச் சட்டம் 1966ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய தனிமனித மருத்துவச் செலவுகள் சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மருத்துவச் சேவைகள் அரசினால் வழங்கப்படலாயிற்று. அனைவருக்கும் ஒரே தரம் உள்ள சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இச் சட்டம் மிகவும் அவதானமான உறுதியான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பணம் படைத்தோர் காத்திருப்பு வரிசை தாண்டிச் சேவைகளை பெறுவற்கு இச்சட்டம் இடம்கொடுக்கவில்லை.[8]
கல்விகனடாவில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் 95%க்கும் கூடுதலாக உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது.[5] இங்கு 42.5% மக்கள் மேல்நிலைக் கல்வியை (some form of post secondary education) பெற்றுள்ளார்கள்.[6] கனடாவில் கல்வியை
என்று பிரிக்கலாம். அடிப்படைக்கல்வியும் உயர்கல்வியும் அரச, தனியார் துறைகளால் வழங்கப்படலாம். ஆனால், மேல்நிலைப் பல்கலைக்கழக படிப்புக்களை அரசே வடிவமைத்து செயல்படுத்துகின்றது. அடிப்படைக் கல்வியும் உயர் கல்வியும் அனைவருக்கும் பொது அரச பாடசாலைகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. பெரும்பான்மையான மாணவர்கள் அரச பாடசாலைகளுக்கே செல்கின்றார்கள், தரமும் நன்றாக அமைகின்றது. உயர் பொருளாதார வசதி படைத்தோரும், சமய சார்பினர் சிலரும் தனியார் பாடசாலைகளை நடத்துக்கின்றார்கள். மேல்நிலைக் கல்வி அரசே நடத்தினாலும் மாணவர்களும் குறிப்பிடத்தக்க செலவை கல்விப் பயிற்சிக் கட்டணமாகப் பங்களிக்கவேண்டும். இவை தவிர நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தில் பாதுகாப்பு துறைக்கென முற்றிலும் இலவசமான மேல்நிலைக் கல்விக்கூடங்கள் உண்டு. அரசு கல்வியை சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கும் நீதிக்கும் சமத்துவத்துக்கும் முக்கியமான ஒரு கருவியாக கருதி வழங்கி வருகின்றது. வெளியுறவுக் கொள்கைகள்முதன்மைக் கட்டுரை: கனடாவின் வெளியுறவுக் கொள்கைகள் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் அண்டை நாடான அமெரிக்காவுடனான உறவே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவும் அமெரிக்காவும் உலகின் நீண்ட மதில்கள் அற்ற எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பெரிய அளவில் வணிக உறவு உள்ளவையாக இருக்கின்றன. மேலும், வடஅமெரிக்க திறந்த வணிக வலய ஒப்பந்தம் ஊடாக கனடா அமெரிக்கா மெச்சிக்கோ ஆகிய நாடுகளுடன் ஒரு நெருக்கமான நட்பான தொடர்பை பேணி வருகின்றது.
பாதுகாப்புக் கட்டமைப்புமுதன்மைக் கட்டுரை: கனடாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு கனடாவின் பாதுகாப்புப் படை தரை, கடல், வான், சிறப்புப் படையணிகளை கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரு கூட்டுக் கட்டமைப்புக்குள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. படைகளின் அதி உயர் இராணுவ அதிகாரி பாதுகாப்புப் பணியாளர்களின் தளபதி ஆவார். இவர் பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரதம அமைச்சருக்கும் கட்டுப்பட்டவர்..
சமூகம்மக்கள் வகைப்பாடுகனடா இரண்டாவது பெரிய நாடாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகையையே கொண்டது. கனடா புள்ளிவிபரத்திணைக்கள 2006 மக்கள் தொகைமதிப்பு அறிக்கையின் படி 31,612,897 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இத்தொகை 2001 கணிப்பீட்டில் இருந்து 5.4 வீதம் மக்கள் தொகை உயர்வைக் காட்டுகின்றது. [9] மக்கள் தொகை எண்ணிக்கை குடிவரவாளர்களாலேயே கூடுகின்றது. சமூக அமைப்புமுதன்மைக் கட்டுரை: கனடாவின் சமூக அமைப்பு கனேடிய சமூக அமைப்பின் கட்டமைப்பை நோக்கினால், ஆங்கிலேயர்களே (ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்) பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்து, பிற ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள்.
பொதுவாக, கனடாவிற்கு புதிதாக குடிவரும் சமூகம் அடிமட்ட பொருளாதார அடுக்கமைவில் இடம் வகிக்கும். நாளடைவில் பெரும்பாலானோர் பொது நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் பல உண்டு. எனினும் சில சமூகங்கள் இதற்கு விதிவிலக்காக அமைவதும் உண்டு.
இனப் பாகுபாடுகனடாவின் 80% மேற்பட்ட மக்கள் ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் ஆவார்கள். எனினும் இவர்களுக்குள் பல இனங்கள் உண்டு. ஆங்கிலேயர், பிரெஞ்சு, ஸ்கோற்ரிஸ், ஐரிஸ், ஜெர்மன், இத்தாலியன், உக்கிரேனியன் என பல இனங்களாக இவர்கள் தங்களை தனித்துவப்படுத்துவர். கனடாவில் 13.4 வீதத்தினர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் (visible minorities) என்றும், 3.4 வீதத்தினர் முதல் குடியினர் என்றும் மக்கள்தொகை கணிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சீனர்கள், கறுப்பர்கள், தெற்காசிய சமூகத்தினர் ஆகியோர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் என்ற வகைக்குள் அடங்குவர். கனடாவில் தமிழர்கள்முதன்மைக் கட்டுரை: கனேடியத் தமிழர் ஏறக்குறைய 250 000 தமிழர்கள் கனடாவில் வசிப்பதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன, எனினும் தெளிவான ஒரு புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. பெரும்பாலான தமிழர்கள் ரொறன்ரோ நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கல்கிறி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 80 களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். சமயப் பிரிவுகள்கனடாவில் பல சமயத்தவர்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் 77.1 % கிறித்தவ சமயத்தவர்கள் ஆவார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் 17% சமய சார்பு அற்றவர்கள். எஞ்சிய 6.3% மக்கள் வேறு சமயங்களை பின்பற்றுகின்றார்கள். மொழிகள்ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டும் ஆட்சி மொழிகளாகும். பிரெஞ்சு மக்களின் மொழிப் போரின் பின்னரே ஜூலை 7, 1969 அலுவல் மொழிச் சட்டம் ஊடாக கனடா முழுவதும் ஆட்சி மொழியானது. இதன் பின்னரே கனடா இருமொழி நாடாக அறியப்படலாயிற்று.
ஆங்கிலத்தை 59.7% மக்களும், பிரெஞ்சை 23.2% மக்களும் தங்கள் தாய்மொழியாக கொண்டுள்ளார்கள். கனடா ஒரு பல்பண்பாடு நாடாக இருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமையும் ஒரு ஆட்சி மொழியையாவது அறிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால், 98.5% மக்களுக்கு ஏதாவது ஒரு ஆட்சி மொழியிலாவது பேச முடியும்.
பண்பாடும் வாழ்வியலும்முதன்மைக் கட்டுரை: கனடாவின் பண்பாடு அடிப்படையில் கனடாவின் பண்பாடு மேற்கத்தைய பண்பாடே. குறிப்பாக ஆங்கில, பிரெஞ்சு, ஐரிஸ், ஸ்கொரிஸ் ஆகிய ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளால் ஆனது. இது தவிர முதற்குடிமக்களின் சில பண்பாட்டு கூறுகளையும் உள்வாங்கியது. 1960ன் பின்பு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் குடிவரவாளர்காளால் (????) ம் ஆண்டு கனடா ஒரு பல்பண்பாட்டு நாடாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விளையாட்டுமுதன்மைக் கட்டுரை: கனடாவில் விளையாட்டு கனடாவில் விளையாட்டுக்களை மூன்று வகைப்படுத்தலாம். அவை குளிர்கால விளையாட்டுக்கள், கோடை கால விளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்கள். குளிர்காலத்தில் விளையாடப்படும் பனி ஹாக்கி கனடாவின் குளிர்கால தேசிய விளையாட்டு ஆகும். வேறு எந்த விளையாட்டையும் விட இதுவே கனடிய அடையாளத்துடன் பண்பாட்டுடன் பின்னியிணைந்தது. இந்த விளையாட்டில் கனடியர்கள் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாக திகழ்கின்றார்கள். கனடியர்கள் யார் என்பதை வரையறை செய்வதில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய களமாக இருக்கின்றது. இவை தவிர குளிர்கால விளையாட்டுக்களான skating, sking, skate boarding போன்றவையும் பலரறி குளிர்கால விளையாட்டுக்களாகும் . கோடைகாலத்தில் லக்ரோஸ் (எறிபந்து?), கனடிய கால்பந்து (Canadian football), baseball, கால்பந்து, துடுப்பாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. லக்ரோஸ் கனடாவின் கோடைகால தேசிய விளையாட்டு ஆகும். கனடாவின் முதற்குடிமக்களின் விளையாட்டுக்களில் ஒன்று மிகவும் பிரபலமாகி வருகின்றது. கால்பந்து பரவலாக விளையாடப்படுகின்றது, ஆனால் மட்டைப்பந்து விளையாடப்படுவது வெகுகுறைவு. கூடைப்பந்து, curling உட்பட பலதரப்பட்ட வேறு விளையாட்டுக்களும் விளையாடப்படுகின்றன. கூடைப்பந்து கனடியர் ஒருவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது. கனடாவிலுள்ள ஒரு என். பி. ஏ. கூடைப்பந்து அணி, டொராண்டோ ராப்டர்ஸ், அமைந்துள்ளது. Curlingம் அடிப்படையிலேயே கனடிய விளையாட்டு ஆகும். பொதுவாக, கோடைகால ஒலிம்பிக் போட்டிகளைக் காட்டிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கனடா கூடிய பதக்கங்களை வெல்லும். ஊடகத்துறைகனடா வளர்ச்சி பெற்ற ஊடத்துறையை கொண்டுள்ளது. ஆரோக்கியமான அரச ஓளி/ஒலி பரப்பு நிறுவனங்களையும், தனியார் துறையையும் கொண்டுள்ளது. கனடாவில் பல தொலைக்காட்சி, திரைப்படத் தயாரிப்புகள் நடை பெறுகின்றது. ஆனால் அவை பெரும்பாலும் அமெரிக்க பொது நுகர்வோருக்காகவே எடுக்கப்படுகின்றன. The Globe and Mail, National Post என்ற இரு தேசிய இதழ்கள் உண்டு; எனினும் The Toronto Star அதிக வாசகர்களை கொண்டது. நாட்டின் குறியீடுகள்
அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் பிரச்சினைகள்கனடா வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நிலையை தக்க வைக்கவும் மேலும் வளரவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றது. இதர தகவல்கள்
விடுமுறை மற்றும் கொண்டாட்ட நாட்கள்
படிமங்கள்பன்னாட்டு பல் நிறுவன மதிப்பீடுகள்
1980 க்கும் 2004 இடைப்பட்ட காலத்தில், மனித வளர்ச்சி சுட்டெண் அடிப்படையில், உலகில் வசிப்பதற்கு கனடா மிகச்சிறந்த நாடாக, ஐக்கிய நாடுகள் அவையால் 10 முறை அறிவிக்கப்பட்டது. [7] ஆதாரங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்தமிழ்அதிகாரப்பூர்வ வெளி இணைப்புகள் - ஆங்கிலம்/பிரெஞ்சு
ஆங்கிலம்
Questions for article: कॅनडा skitng, கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
IHS Europe: Infrared Heating Systems for Home and Business.