பாதரசம்

Article in other languages:

பாதரசம்

பாதரசம் ஒரு தனிமம் ஆகும். இது Hg என்ற குறியீட்டால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 80 ஆகும். இது நீர்ம நிலையில் உள்ள ஓர் உலோகம் ஆகும்.பாதரசம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது. இது பளுமானி, அழுத்தமானி, தெர்மாமீட்டர் ஆகியவற்றால் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி மருந்துகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பல்புகள் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. எனினும் பாதரசம் விஷத்தன்மை மிக்கது.


பயன்கள்

  • பாதரச ஆவி விளக்கில் பயன்படுகிறது.
  • பல் மருத்துவத்தில் பயன்படுகிறது.
  • மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.


நச்சுத்தன்மை

உலகிலேயே மிக மோசமான ஆறு நஞ்சுகளில் ஒன்று என ஐ.நா சபையால் பட்டியல் இடப்பட்டுள்ளது[1].

பாதரசத்தால் தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன

மேற்கோள்கள்

  1. பக் 71, ஜே. பால்பாஸ்கர் (டிசம்பர், 2002). தமிழக சுற்றுச்சூழல் நேற்று, இன்று, நாளை.... அமைதி அறக்கட்டளை. 
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

Questions for article:

This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.


IHS Europe: Infrared Heating Systems for Home and Business.