|
Article on other languages:
|
தமிழ் விக்கிப்பீடியா இணைய தளத்தில், ஒரு பத்தி அளவோ அதற்கும் குறைவான அளவோ மட்டுமே உள்ள கட்டுரைகள் 'குறுங்கட்டுரைகள்' என முத்திரை குத்தப்படுகின்றன. பெரும்பாலான குறுங்கட்டுரைகள், கட்டுரை தலைப்பு குறித்த சிறிய, ஆர்வத்தைத் தூண்டும் துணுக்குகளைத் தருவதோடு முழு வடிவம் பெறாமல் இருக்கின்றன. நீங்கள் இந்த மாதிரி குறுங்கட்டுரைகளளை இனங்கண்டு, அந்தந்த பக்கங்களில் மேலும் அதிக விவரங்களைத் தொகுப்பதன் மூலம் அவற்றை முழுமையடையச் செய்ய உதவலாம்.
குறுங்கட்டுரை அறிவிப்பு !குறுங்கட்டுரை காட்டிநீங்கள் புதிதாக ஒரு கட்டுரையை உருவாக்கும் பொழுது, அது 'குறுங்கட்டுரை' என வகைப்படுத்தத் தக்கது என்று எண்ணிணால் , பின்வரும் 'காட்டி'-யை கட்டுரையின் முடிவில் இணைக்கவும்:{{stub}} இவ்வாறு செய்தால், கீழ்க்காணப்படும் முத்திரை தானாகவே தோன்றிவிடும்.
இவ்வாறு அறிவிப்பது அனைவரையும் அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாய் அமையும். துறை சார்ந்த குறுங்கட்டுரைகள்ஒரு கட்டுரையை, ஒரு துறை சார்ந்த குறுங்கட்டுரையாக வகைப்படுத்த இயலும் என்று நீங்கள் எண்ணிணால் , பின்வரும் 'காட்டிகளில்' (Tags) பொருத்தமாக இருக்கக்கூடியவற்றை, கட்டுரையின் முடிவில் இணைக்கவும்.
எப்படி குறுங்கட்டுரைகளின் பட்டியலை அறிவது ?
|
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.